Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்: அவசர வழக்கு…. இன்று என்ன நடக்கப்போகிறது…????

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை  செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்றே அவசரமாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வு இன்றே விசாரணைக்கு ஏற்பாரா அல்லது முன் முறையிடவும் திட்டமிட்டுள்ளார். இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாளைக்கு தள்ளிவைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Categories

Tech |