கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்ததாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில்அந்த மாணவி 12ம் தேதி இரவு 10.23க்குஇறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த மாணவி 12ம் தேதி இரவு 9.30 மணிக்கு படிப்பு அறையில் இருந்து வெளியே வந்து 3வது மாடியில் உள்ள ஹாஸ்டலுக்கு சென்றதாகவும், பிறகு 10.23க்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.