கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறையில் கைதான 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.