Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யா கொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. அதிரடியில் சிபிசிஐடி அதிகாரிகள் ….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் போலீசார் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷை கைது செய்தனர். இது குறித்து போலீசார் அவரிடம்  நடத்திய விசாரணையில் தனது காதலை ஏற்க மறுத்ததால் சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். இவர்களின் பரிந்துரையை  ஏற்று பெருநகர காவல் துறை ஆணையர் நேற்று சதீஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில்  புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அங்கு  வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |