கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மாதச்சீட்டு நடத்திவந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் ராணுவவீரர் சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராணுவவீரர் மாணவியுடன் நெருக்கமாகி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதை நண்பர்களுக்கும் பகிர்ந்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமையைத் தாங்க முடியாத அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.