Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள எருமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கண்ணன்(25) என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் முருக்கோடை பகுதியை சேர்ந்த 12ஆம் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் மகளை காணாததால் அவரது தந்தை வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணை நடத்தி மாணவியை கடத்தி சென்ற ரோகித் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |