மாணவியை கட்டயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கீழேரிப்பட்டியில் உள்ள ஜீவா நகரில் நந்திஷ்(23) என்பவர் வசித்து வருகிறார். கட்டுமான தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த உண்மைகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து நந்திஷை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர்.