Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |