மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து அலுவலக ஊழியரை காவல்துறையினர் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
ஆனால் சீனிவாசன் அந்த மாணவியை திருமணம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கோவில்பட்டியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.