Categories
மாநில செய்திகள்

மாணவிகள் படிக்கும் பள்ளிகளில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு சார்பாக  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் ஆசிரியர்கள் அனைவரையும் குறை கூற முடியாது. மாணவிகள் பாலியல் புகார் கூறினால் துறையின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |