விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுசுவரங்குடி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 268 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தாமோதரன் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவது,பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதனால் பள்ளி மாணவிகள் மன உளைச்சல் அடைந்து பெற்றோரிடம் கூறியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று பள்ளியில் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அங்கு வந்த போலீசார் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.