Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகளுக்கு ஏற்பட்ட தொல்லை…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த வாரம் சைல்டு லைன் அமைப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதுவரை அவர்கள் 13 மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ல்பர்ட் வளவன் பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மேற்கண்ட இரண்டு ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |