நீட் தேர்வு மையத்தில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்தியதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்க்கோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியாக பரிசோதித்தனர். மெட்டல் மூலம் பரிசோதனை செய்தலில் மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் கொக்கி கண்டறியப்பட்டதாக எனது மகளிடம் கூறப்பட்டது.
உடனே கொக்கிகளை அகற்றும்படி கூறப்பட்டது .இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். நீட் தேர்வு மைய ஊழியர் மாணவரிடம் இதைவிட முக்கியமானது என்ன உங்கள் எதிர்கால முக்கியமா? அல்லது உள்ளாடைகளா? என்று மிரட்டும் பாணியில் பேசி உள்ளனர். இதன் காரணமாக தேர்வு எழுத வந்ததில் ஏறக்குறைய 90 சதவீதம் மாணவிகள் தங்களது உள்ளாடைகளை கழட்டி ஒரு அறையில் வைக்க வேண்டிய தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், உள்ளாடையின்றி இத்தகைய பதின்பருவ பெண்கள் தேர்வெழுதும்போது, அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.