Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் விடுதியை இடிப்பதில் ஒரு சிக்கல் இருக்கு…. என்னென்னு தெரியுமா?…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் இருக்கிறது. இங்கு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியிருந்தனர். 30 வருடம் பழமையான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. ஆகவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுத்துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அருகேயுள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து மாணவர் விடுதியை இடித்து அகற்றுவதற்கான பணிகள் சென்ற வாரம் தொடங்கியது. அப்போது அனைத்து அறைகளிலும் கதவுகள், ஜன்னல் கம்பி, பலகைகள் அகற்றப்பட்டது. எனினும் விடுதியில் மின்இணைப்பு இதுவரை துண்டிக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக விடுதி கட்டிடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாட்கோ அதிகாரிகள் கூறியதாவது, பாலசுந்தரம் சாலையிலுள்ள மாணவர்கள் விடுதியின் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புது கட்டிடம் கட்டப்பட இருக்கிறது.

அதில் தரைத்தளம் முதல் 2-வது தளம் மற்றும் விளையாட்டு மைதானம், நூலகம், படிக்கும் அறை, சாப்பாட்டு கூடம் அமைக்கப்பட இருக்கிறது. ஆகையால் மின்இணைப்பை துண்டித்தால் பழைய விடுதி கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியானது நடைபெறும் என்று கூறினர். அதன்பின் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பழைய விடுதி கட்டிடத்திற்கு ரூபாய்.1 லட்சத்து 4 ஆயிரம் மின்கட்டண பாக்கி உள்ளது. அதனை செலுத்துவதற்கு நிதிவந்ததும் பாக்கியை செலுத்தி விடுவோம் என்று கூறினர்.

Categories

Tech |