Categories
மாநில செய்திகள்

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் சேர உயர்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக உயர் கல்வி வழிகாட்டி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் https://t schools.gov.in என்ற இணையதளத்தில் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |