Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை…. பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு….!!!!

பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு  தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம்  வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும்.

மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 1-ஆம்  தேதி வரை 9 நாட்களுக்கு  விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜனவரி மாதம் 2-ஆம்  தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்” என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |