Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களை திட்டாதீர்கள்”…. வெளியான நீட் தேர்வு முடிவு…. வேண்டுகோள் விடுத்த அமைச்சர்….!!!!

இன்று நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 17-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான”நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. இதை நாடு முழுவதும் இருந்து 17 லட்சத்தி 78 ஆயிரத்து 724 மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1  லட்சத்து 40 ஆயிரம் பேர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்விற்கான   முடிவு http:// neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது. இன்று நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை திட்டுவதும், கண்டித்துக் கொள்வதும் கூடாது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் யாருக்காவது மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடனடியாக மாவட்ட மனநல ஆலோசனை குழுக்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதனையடுத்து நமது தமிழக அரசு நீட் தேர்வுக்கு விளக்கு பெற தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதால் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமில்லை. வேறு வழி இல்லாமல் தான் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |