இங்கிலாந்து தன்னுடைய நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.
இந்திய நாட்டை இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் எப்போதுமே தங்களுடைய நண்பன் என்றே கூறுவார். இந்நிலையில் இங்கிலாந்து தனது நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து வர்த்தக செயலாளரான ஆனிமேரி அடுத்த மாதம் தலைநகர் டெல்லிக்கு வரும்போது மேல் குறிப்பிட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இங்கிலாந்திற்கு செல்லும் மாணவர்கள் உட்பட பலருக்கு மிகவும் எளிமையான முறையிலும், குறைந்த கட்டணத்திலும் விசா கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.