நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கல்வி கற்க மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்க உதவும் வகையில், “வித்யா தான்” என்ற பெயரில் 10 ஆயிரம் வரை கடன் (6 மாதம் அவகாசத்துடன்) வழங்கப்படும் என்றும், முதல் 90 நாட்கள் வரை அதற்கு வட்டி வசூலிக்கபடாது என்றும் முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் வரும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படும். நிறுவனத்தின் 3600- க்கு மேற்பட்ட கிளைகளில் இந்த சேவையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.