தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் டிச.,27 முதல் டிச.,30 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரியில் நடைபெறவிருந்த போட்டிகள் நிர்வாக காரணங்களுக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெறும். இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.