Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…..? இன்று(19.10.2022) MBBS, MDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூர் மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வானது இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது. மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும். விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு முதல் நாளிலும், பொது கலந்தாய்வு இன்று முதல் 25ஆம் தேதி வரை இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |