நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிடைத்திருக்கும் இந்த நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி இந்த செய்தி வெளியானபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது? அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளிட்ட பல கேள்விகளை மாணவர்களிடம் கேட்டுள்ளார்.