மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்தனர். இந்த நிலையில் இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும். இதேபோல் மேலும் பல மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்க வாய்ப்புள்ளது. எனவே, விடுமுறை என நினைத்து வீட்டில் இருந்து விடாதீர்கள்.