Categories
மாநில செய்திகள்

மாணவர்களே குட் நியூஸ்….. ரூ.75,000 நிதியுதவி வேண்டுமா…? உடனே விண்ணப்பிங்க…!!!!

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களின் தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தரமாக முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ம் ஆண்டுமுதல்  75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இதில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பயன் பெறலாம். இந்த உதவித்தொகை மாணவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகையை மாணவர்களின் உயர்கல்வி மற்றும் பராமரிப்புக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெற்றோரை இழந்த மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் இறப்புச் சான்றிதழ், உடற்கூறாய்வு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றோடு இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |