மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகாமை நேரடியாக அனுப்பியது. மேலும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்ட அறிவிப்பில், அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் உரிய விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மோசடியான இணையத்தளம் அல்லது முகவர்களை நம்பி நீட் தேர்வர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர வேண்டாம் என்று மெடிக்கல் கவுன்சிலில் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மோசடியான இணையத்தளம் அல்லது முகவர்கள் குறித்து தகவல் ஏதாவது தெரிந்தால் என்சிசிக்கு உடனடியாக தெரிவிக்க கூறியுள்ளது.