Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கல்வி உதவித்தொகை…. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கை….!!!!!!!

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்க்கு  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் ஐஐடி மெட்ராஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியத்திலிருந்து ரூபாய் 10.5 கோடி வழங்கியிருக்கிறது.

மேலும் இந்த நிதியம் சென்னை ஐஐடியில் பயிலும் தகுதி வாய்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கல்வி உதவித்தொகை வாயிலாக செலுத்துவதற்கு உதவுகிறது. 2021-2022 ஆம் நிதியாண்டில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, சென்னை ஐஐடி ஒரே நிறுவனத்திடம் இருந்து பெற்ற அதிகபட்ச தொகை இது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சென்னை ஐஐடியின் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் வி கே சிங் போன்றோர் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.

இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி அனைவருக்குமான கல்வி நிறுவனம் என்பதுதான் சென்னை ஐஐடியின் குறிக்கோள் என கூறியுள்ளார். மேலும் பிஎஸ்சி பட்டப்படிப்பு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போன்ற சென்னை ஐஐடியின் முயற்சிகள் இந்த நிறுவனத்தை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக மாற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் இயக்குனர் வி.கே.சிங் பேசும்போது, இன்று கல்வி உதவித்தொகை திட்டம் என்பது மக்களிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தை சமுதாயத்திற்கே திருப்பி வழங்குவதற்கான நேரடி வழிமுறை என்பதில் தமது நிறுவனம் நம்பிக்கை கொண்டு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி கட்டண உயர்வு காரணமாக மாணவர்களின் படிப்பு செலவிற்காக தேவைகளும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர் இந்த உதவி தொகையை பெற்று பயனடையும் மாணவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |