Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்”…! தமிழக அரசு புதிய அதிரடி?…!!

தேர்தல் பணி காரணமாக நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் அந்த பள்ளிகளுக்கு கடந்த 18ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ஆம் தேதி பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இதனால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |