தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலை இல்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகின்றது. முகாம்களிலுள்ள பழுதடைந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார மேம்பாட்டு நிதி அது 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷனில் விலையில்லா அரிசி வழங்கப்படும்.
மேலும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், இதர பெரியவர்களுக்கான உதவித் தொகை 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உதவித் தொகை 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து முகாம் வாழ் இலங்கை தமிழர்களில் ஆண்டுதோறும் 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்பிற்கு வழங்கப்படும் ரூ.2,500 கல்வி உதவித்தொகை 10,000 ஆகவும், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு வழங்கப்படும் 3000 ரூபாய் ஊக்கத்தொகை 12000 ஆகவும், இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.