Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இலவசமாக படிக்க வாய்ப்பு….!!!!

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நடப்பு கல்வியாண்டில் 2022- 23 இணைப்புக் கல்லூரிகளில் அதாவது அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதில் விண்ணப்பிக்க இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Categories

Tech |