Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு புதிய செயலி….. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அதிரடி….. குஷியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் விளையாட்டில் அதிகம் ஈடுபடும்போது உடல் ரீதியாக மற்றும் மனரீதியாக சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். உலகத் திறனாய்வு உடர்திறன் தெரிவு போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் இன்று கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசிய அமைச்சர், 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அதற்காகவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு என்று வரும்போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நாம் பலம் பெற வேண்டும். மாணவர்கள் அதை பெரும்போது சமூகமும் அதைபெறும் .

மாணவர்கள் விளையாட்டில் அதிகம் ஈடுபடும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும். இன்று உலக திறனாய்வு உடற்கிறன் தெரிவு போட்டிக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி மூலம் மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளி கல்வித்துறையை ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |