நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சாரண மற்றும் சாரணியர் இயக்கத்தின் தலைவராக பதவியேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர்,நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தாலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி முறையாக அளிக்கப்பட்டு வருகிறது அதேபோல் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படுமா, பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற நிலை இருந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என அவர் கூறியுள்ளார்.