தமிழக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படாததால் பேருந்தில் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் புதிய பயண அட்டை வரும் வரையில் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.