Categories
அரசியல்

மாணவர்களுக்கு சூப்பர் சாய்ஸ் இதுதான்!…. சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி க்ரோம்புக் லேப்டாப்….!!!!

புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப்பை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சாதனமாக இந்த லேப்டாப் உள்ளது. 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 12.4 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகியவையும் இந்த லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இன்டல் செலிரான் N4500 பிராசஸர், 4ஜிபி ரேமுடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 6, இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் ஆகியவை இந்த க்ரோம்புக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 45.5Whr பேட்டரியும் இந்த லேப்டாப்பில் தரப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் பேட்டரி லைஃபை 10 மணி நேரம் வரை கொண்டுள்ளது. மேலும் நேனோ செக்யூரிட்டி ஸ்லாட், 720p ரெக்கார்டிங் அம்சம், 1 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய மதிப்பில் இந்த லேப்டாப்பின் விலை ரூ.35,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த லேப்டாப்பின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

Categories

Tech |