நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது.
வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் 10,11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையானது தொற்று பரவலை பொருத்து நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது, இதுபற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சத்துணவு பெரும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 20-ஆம் தேதி முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களை கணக்கீடு செய்து 15 நாட்களுக்கு ஒரு முறை உலர் உணவுப் பொருள்கள் அளிக்கப்படுகிறது. மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அரிசி, பருப்பு, கொண்டைகடலை, பருப்பு, முட்டை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். அதே போன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
மேலும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று நேரடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு அவர்களது இல்லத்திற்கு சென்று கொடுக்கும் வகையில் உணவாக தொடர்ந்து வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதை விட கூடுதலாகப் பருப்பு, கொண்டைக்கடலை, பாசிப்பயிறு வழங்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.