உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றன. எனவே கல்வி கடன் பெற விரும்புவோர் குறைந்த வட்டிக்கு எந்தெந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது கல்வி கடன்களுக்கு குறைந்த வட்டி விதிக்கும் சில வங்கிகள் பற்றிய விவரங்கள் இதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி (IDBI Bank) – 6.75%
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) – 6.85%
இந்தியன் வங்கி (Indian Bank) – 6.9%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) – 7%
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) – 7.15%
எஸ்பிஐ (SBI) – 7.25%
கனரா வங்கி (Canara Bank) – 7.30%