Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் …. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளதாகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, நிலைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடைய கூடாது.

ஒரே சிந்தனையோடு படித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்படும். அதனைப் போலவே பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கும் இன்னும் ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |