நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் விபத்தில் இறந்த மாணவர்கள் மற்றும் காயமுற்ற மாணவர்களை அடையாளம் கண்டறிந்து பெற்றோர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிப்பதில் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டார். ஏனென்றால் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய செந்தாமரைக்கண்ணன், சாப்டர் பள்ளி விபத்தில் தான் பெற்ற அனுபவமும், மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லாததால் பெற்றோர்களிடையே ஏற்பட்ட பதட்டத்தையும் குறைக்க முடியாமல் திணறிய சூழலையும் எடுத்துரைத்தார். எனவே கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அடையாள அட்டையை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் பள்ளிக்கு அருகே இருக்கும் காவல் நிலையத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.