Categories
மாநில செய்திகள்

“மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க”….. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’….. பள்ளிக்கல்விதுறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களும் கைநாட்டு போடுவதை தவிர்த்து கையெழுத்து போட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக 7.15 கோடி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்றும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாரமிருமுறை இதழை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலமாக மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு நல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |