பட்டதாரி ஆசிரியர் கழகம் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை கொரோனா பரவால் அதிகரிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மாயவன், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநில தலைவர் பக்தவச்சலம், மாநில செயலாளர் சேது செல்வம், பள்ளி கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலர் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது, கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தற்போது பேரலையாக உருவெடுத்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளையும், இளம் வயதினரையும் தாக்கும் பேராபத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறைத் தேர்வுகளை நடத்துவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க இயலாது. மாணவர்களுக்கு தேர்வுகளை விட உயிர் தான் முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இன்றைய மாணவர்களை காப்பாற்றிட நடந்து கொண்டிருக்கும் செய்முறை தேர்வை உடனடியாக தள்ளிவைக்க வேண்டுகிறோம் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.