சட்ட கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் சட்ட கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த அப்துல் ரஹீமை விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விடிய விடிய தாக்கியுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆர்.டி.ஓ-வுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாக்குதலுக்கு ஆளான அப்துல் ரஹீம் மற்றும் அவரது நண்பர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.