பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது.
பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டனர். அப்போது புலி தாக்கி இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.