சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கண்டமனூர் அடுத்துள்ள துரைச்சாமிபுரத்தில் மூலவைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நேற்று முன்தினம் இரவு மூலவைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்த குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது 38), சுப்புராஜ் (53), ஆதன் (52), மற்றும் சோலைத்தேவன்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (45) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.