Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரியசெவலை பகுதிக்குச் சென்றுள்ளார்.‌ அப்போது  துலுக்கபாளையம் அருகே சென்றபோது அங்கு கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனம்  பலமாக மோதியது.

இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |