மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், மணக்குடி தெற்கு தெருவில் வசித்து வருபவர் மாட்டு வியாபாரி செந்தில் (43). இவர் பெரிய நாகலூர் வடக்கு தெருவில் வசித்து வந்த தேவேந்திரன் என்பவரது பசுமாட்டை கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ 17,000-க்கு விலை பேசி வாங்கினார். அப்போது முன்பணமாக ரூ 1,700 கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 15,300 கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வி.கைகாட்டி டி.எம்.எஸ் நகரில் செந்திலிடம் மீதமுள்ள பணத்தை தருமாறு தேவேந்திரன் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு செந்திலை தகாத வார்த்தையால் திட்டினார். அதன்பின் தேவேந்திரன், அவரது உறவினருடன் சேர்ந்து செந்திலை தாக்கியுள்ளார்கள்.
இதனால் படுகாயம் அடைந்த செந்தில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் தேவேந்திரன், செந்தில் ஆகியோர் மீது கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.