Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாடு விடும் விழாவை நடத்தக்கூடாது…. ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

மாடுவிடும் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் தாலுகாவில் உள்ள மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பாக இரு வேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஊர் மேட்டுக்குடி நவீன்குமார் தரப்பினர் மாடு விடும் திருவிழாவுக்கு முறையாக அனுமதி  வாங்கினர். ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி தங்கள் தரப்பினரை இந்த மாடு விடும் விழாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் இந்த விழா நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கே. வி. குப்பம் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரும் பங்கேற்று அமைதிக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் வெகு நேரம் நடைபெற்றும் இரு தரப்பினருக்கு இடையே தீர்வு காணாமலேயே கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து நவீன்குமார் தரப்பினர் ஊருக்கு திரும்பி பனமடங்கி பேருந்து நிலையம் அருகில் திடீரென்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் து.சரண்யா, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.சுப்பிரமணி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அதிகாரிகள் அனுமதி அளித்ததன்படி மாடு விடும் விழாவை நாளை சனிக்கிழமை நடத்தலாம் என்று உறுதி கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Categories

Tech |