நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அடுத்து அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாடர்னா தடுப்பூசி 90% மேல் அழிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.