Categories
மாநில செய்திகள்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில்…. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பில் இருந்து வருகிறார் வெங்கடாசலம். இந்நிலையில் மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

தற்போது இந்த பணியில் இருந்து வரும்வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தின் உள்ளே சென்று சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |