தமிழகத்தில் சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை பொறுத்து கொள்ளிடம் கரையோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் வெள்ளம் மிகுதியாக வரும் போது இளைஞர்கள் ஆர்வம் மிகுதியில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்