கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்த காரணத்தினால் கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் காவிரி அணையில் இருந்து வெளிவந்த தண்ணீர் மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் மழைப்பொழிவின் அளவு குறைந்துள்ளதாக காரணத்தினால் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.