Categories
மாநில செய்திகள்

மழைக்கால நோய்கள்… போதிய அளவு மருந்துகள் கையிருப்பு… தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நமது தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,410 பேரும், கடந்த ஆண்டு 6,309 பேரும், இந்த ஆண்டு 5,700 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளது. நமது தமிழ்நாட்டில் பருவ கால நோய்களுக்கு தேவையான மருந்துகளும், மருத்துவ பொருட்களும் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே சிக்குன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சலுக்கு மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது  2 லட்சம் மாத்திரைகள் உள்ளது. அதேபோல் தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான், இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல் போன்றவை அதிக அளவில் உள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது கூடுதல் எண்ணிக்கையில் மருந்து மற்றும் மாத்திரைகள் உள்ளது. மேலும் நமது தமிழ்நாட்டில் நோய்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என அதில் கூறியுள்ளனர்.

Categories

Tech |